| 245 |
: |
_ _ |a தண்டறை வழிப்போக்கர் மண்டபம் - |
| 300 |
: |
_ _ |a பெருங்கற்காலம் |
| 500 |
: |
_ _ |a கல்வட்டம், பெருங்கற்காலம், சங்க காலம், தொல்லியல், பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், கருப்பு-சிவப்பு பானையோடுகள், முதுமக்கள் தாழி, தண்டறை, தண்டரை, குத்துக்கல், நடுகல், அய்யனார் கோயில், காஞ்சிபுரம், வந்தவாசி சாலை, உத்தரமேரூர் வட்டம், மேற்பரப்பாய்வு, களப்பணி, களஆய்வு, சத்திரம், ஊர் மன்றம், வழிபோக்கர் மண்டபம் |
| 520 |
: |
_ _ |a காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தண்டறை என்னும் ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் வடகிழக்கே அமைந்துள்ள மிகப்பரந்த தற்போது வேளாண்மை செய்யப்பட்டுள்ள நிலப்பரப்பில் தொல்லியல் தரவுகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கருப்பு-சிவப்பு பானையோடுகளும், உடைந்த தாழிகளின் வாய்ப்பகுதிகளும், கல்வட்டங்களும், இரும்புக் கசடுகளும் (Iron slags) காணப்படுகின்றன. மேலும் குத்துக்கல் எனப்படும் நடுகல்லின் ஒரு வகையான வீரருக்கான நடப்பட்ட நினைவுக்கற்கள் இரண்டு இவ்வூரில் காணப்படுகின்றன. இங்கு முன்பு வழிபாட்டில் இருந்த அய்யனார் கோயில் ஒன்றும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் தற்போது காணப்படவில்லை. ஆனால் இங்கு அய்யனார், யானை வாகனம், அம்மன், காவல் பெண் தெய்வம், நடுகல் ஆகியன இவ்விடத்தில் பரவிக் கிடக்கின்றன. இத்தொல்லியல் தரவுகள் தொல்லியல் ஆய்வாளர்கள் கோ.சசிகலா, திரு.பரந்தாமன் ஆகியோரின் மேற்பரப்பு களஆய்வின் போது கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இவ்வூர் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளதை இங்குள்ள தொல்லியல் ஈமச்சின்னங்கள் தெரிவிக்கின்றன. |
| 653 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 700 |
: |
_ _ |a உத்தரமேரூர், திருக்கழுக்குன்றம் குடைவரை, பெருநகர் குத்துக்கல், சேர்ப்பாக்கம் தொல்லியல் |
| 710 |
: |
_ _ |a மதுரை கோ.சசிகலா |
| 752 |
: |
_ _ |a தண்டறை |c தண்டறை |d காஞ்சிபுரம் |f உத்தரமேரூர் |
| 906 |
: |
_ _ |a பிறகட்டுமானம்-வழிபோக்கர் மண்டபம் |
| 914 |
: |
_ _ |a 12.63294766 |
| 915 |
: |
_ _ |a 80.02810145 |
| 934 |
: |
_ _ |a தண்டறை உத்தரமேரூர் வட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இவ்வூரின் சாலையின் கண் வழிப்போக்கர் மண்டபம் ஒன்று உள்ளது. தூண்களுடன் கூடிய இம்மண்டபத்தின் மேற்கூரையில் தெலுங்கு மொழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேலும் மண்டபத் தூண்களில் பாலியல் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கல் மண்டபம் ஊர்ச்சத்திரம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இவ்வூரின் விவசாய நிலத்திலும், அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்பிலும் குத்துக்கற்கள் எனப்படும் ஈமச்சின்ன நினைவுக்கற்கள், கல்வட்டங்கள், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பானையோடுகள், இரும்புக் கசடுகள் மற்றும் அய்யனார் சிற்பங்கள், நடுகல், பெண் தெய்வங்கள் ஆகியன கண்டறியப்பட்டுள்ளன. |
| 995 |
: |
_ _ |a TVA_MON_00067 |
| barcode |
: |
TVA_MON_00067 |
| book category |
: |
பிற கட்டுமானங்கள் |
| Primary File |
: |
TVA_MON_00067_காஞ்சிபுரம்_தண்டறை-சத்திரம்-0001.jpg.jpg
TVA_MON_00067_காஞ்சிபுரம்_தண்டறை-சத்திரம்-0002.jpg.jpg
TVA_MON_00067_காஞ்சிபுரம்_தண்டறை-சத்திரம்-0003.jpg.jpg
TVA_MON_00067_காஞ்சிபுரம்_தண்டறை-சத்திரம்-0004.jpg.jpg
TVA_MON_00067_காஞ்சிபுரம்_தண்டறை-சத்திரம்-0005.jpg.jpg
TVA_MON_00067_காஞ்சிபுரம்_தண்டறை-சத்திரம்-0006.jpg.jpg
TVA_MON_00067_காஞ்சிபுரம்_தண்டறை-சத்திரம்-0007.jpg.jpg
TVA_MON_00067_காஞ்சிபுரம்_தண்டறை-சத்திரம்-0008.jpg.jpg
|